ராஜிதவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோத்தபாய ராஜபக்ஷ!

305 0

gotabhaya_rajapaksaஆவா குழுவை உருவாக்குயது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே என நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ‘மலினத்தனமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதைவிட்டு ராஜித சேனாரட்ண தனது அமைச்சுப் பொறுப்பில் கவனம் செலுத்தவேண்டுமென கோத்தபாயர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை அவர் சரியாகச் செய்யவேண்டும். அபத்தமான கதைகளைக் கொண்டுவரக்கூடாது.

இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஆற்றல் எனக்கு இருக்குமேயானால், அதனை நான் பாராட்டாகவே எடுத்துக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.