ஓமனில் இலங்கைப் பணிப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்துக்கு இலங்கையில் இருந்து பணிப் பெண்கள் ஓமனுக்கு அழைத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் த ஓமன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
குறிப்பாக இரண்டு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தூதரகங்களுக்கு தெரியாமல் அவர்கள் ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பில் துரித விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.