வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

384 0

வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தில் இளம் குடும்பபெண்ணும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் அயல்கிராமமான பன்றிகெய்த குளத்தில் உள்ள கணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதிய வேலர் சின்னக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் சுகந்தினி என்ற 23 வயது குடும்பபெண்ணும் அவரது இரண்டரை வயதுடைய நா.ஜிந்துயனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிராம மட்டத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும் நுண்நிதி நிறுவனமொன்றில் கடனை பெற்ற குறித்த பெண் கணவருடன் நேற்றையதினம் முரண்பாட்டதை அடுத்து இரண்டரை வயதுடைய தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது 05 வயது மகனை அழைத்தபோது அவன் தனது தந்தையுடன் நிற்பதாக கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் இரவாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் அயலவர்களின் உதவியுடன் கணவனும் இணைந்து தேடியுள்ளனர்.

இந்நிலையில் பன்றிகெய்த குளம் கிராமத்தின் பின்புறமாக பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட கிணற்றில் இருந்து இருவரது சடலமும் மீட்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் சென்றிருந்தனர்.