சிறிலங்காவின் வளர்ச்சிக்கு சீனா வழங்கிய வலுவான மற்றும் நீண்டகால ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான நட்புறவை எதிர்வரும் காலங்களிலும் தாம் தொடரவுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். சின்ஹுவா செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.