கிளிநொச்சி, அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் 1 வயதுடைய எஸ்.தஸ்மியா எனும் பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தன்னுடைய பாட்டியுடன் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தென்னை மரம் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு திடீரென மரம் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பாட்டி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.