திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இக்பால் இல்ஹாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை மீன் பிடிப்பதற்காக ஐவர் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காணாமல் போயுள்ளனர். ஏனைய இருவரும் நீந்தி கரைச் சேர்ந்தநிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.