பிரியங்க பெர்னாண்டோ விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – இராணுவ தளபதி

559 0

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்த விவாகரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் எவ்வாறு இருப்பினும் இலங்கை இராணுவமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கை ஒன்றினை கையாளும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலையதில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக கடைமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை இராணுவத் தளபதி இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இன்று தேசிய பாதுகாப்பில் எந்த சிக்கலும் இல்லை. இலங்கை இராணுவமும் ஏனைய பிரதான படைகளும் இணைந்து தேசிய பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது. மக்கள் அச்சம் கொள்ளும் அளவிற்கு நாட்டில் எந்த பலவீனமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இப்போதுள்ள காலநிலை மாற்றங்களில் மக்கள் சிரமங்களை சந்தித்துள்ள நிலையில் இராணுவம் முழுமையாக களத்தில் உள்ளனர். மக்களை மீட்கும் நடடிக்கைகள் எப்படியும் எம்மால் முன்னெடுக்கப்படும். மக்களுக்கு எங்காவது சிரமங்கள் ஏற்பட்டால் உடனடியாக எமக்கு அறிவிக்க முடிந்தால் உடனடியாக நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினானர்.