ஹெரோயினுடன் மூவர் கைது

271 0

வவுனியாவில் இளைஞர்கள் மூவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை வவுனியா தேக்கவத்தை பகுதிகளில் நின்ற இளைஞர்களிடமிருந்து 1010 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 20,30,38 வயதுடைய இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.