மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலம் கடந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக இந்த புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை முன்வைக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள விகிதாசார மற்றும் தொகுதிவாரியான முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.