தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது – சி.வி.கே

325 0

தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது என்றும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால், அது தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்தும் என்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு கருத்துடன் ஒன்றுபடுவார்களென நான் நினைக்கவில்லை.

கட்சியிலிருந்து விலகி சென்றவர்கள் ஒன்றாக ஒருவரின் தலைமையின் கீழ் இல்லை. தனித்தனியாகவே செயற்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால், அது தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்தும்” என மேலும் தெரிவித்தார்.