முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியானது

318 0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அரசியல் பயணத்தில் இருந்து தான் விலக்கபோவதில்லை என கூறியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, “அரசியலில் மீண்டும் வர வேண்டும் என்று நம்புவதாகவும், தன்னால் முடியும் வரை அரசியலில் தொடருவதாகவும்” கூறியிருந்தார்.

அத்தோடு “தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் வரை நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேத்தலில் அவர் தனது சொந்த ஊரான பொலநறுவையில் களமிறங்க ஒப்புக்கொண்டார் என சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.