கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு சென்ற ஒன்பது பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் 2019 டிசம்பர் 6 ஆம் திகதி கடற்படை ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.
அதன்படி, கடற்கரையில் சென்ற சந்தேகத்திற்கிடமான பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பார்சல்களில் நிரப்பப்பட்ட 818 கிலோகிராம் பீடி இலைகளை மீட்கப்பட்டன.
இங்கு இரண்டு லொரிகள், ஒரு கேப் வண்டி மற்றும் வேன் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 23 முதல் 60 வயதுக்குட்பட்ட புத்தளம், நாஉல, மாத்தலே, கற்பிட்டி, தலவில மற்றும் கலேவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், பீடி இலைகள், இரண்டு லொரிகள், ஒரு கேப் வண்டி உட்பட வேன் வண்டி மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.