சட்டவிரோத உள்நாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவரை தனமல்வில – சர்வோதய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போதே குறித்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,
சந்தேகநபரிடம் கைப்பற்றிய துப்பாகியானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.