கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்!

307 0

கிளிநொச்சி மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடல், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், பொலிஸார், திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தற்போது காணப்படும் வெள்ள அனர்த்தத்தின் நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மக்களுக்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

 

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு  கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இதன் போது, மக்களுக்கு அவசர உதவிகள் பல தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொடுப்பதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவ முன்வரு வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.