தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பலி

360 0

ஹபரண, அளுத்ஒய, சிங்ஹகம பகுதியில் தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 5 வயதுடைய பஹமி சஹன்யா விஜயபாஹூ என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தை உழவு இயந்திரத்தின் வீட்டுத் தோட்டத்திற்குள் எடுப்பதற்காக பின்னால் செலுத்திய போது குறித்த சிறுமி பின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமியை கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்ஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.