வடக்கில் செயற்படும் ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை கோத்தபாய மறுத்துள்ளார். அமைச்சரின் இவ்வாறான கருத்துக்களின் ஊடாக தனக்கு அல்ல முழு இராணுவத்திற்கே அவமதிப்பு என இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியில் என் மீது தாக்குதல் மேற்கொள்ளுங்கள், இவ்வாறான கருத்துக்கள் வெளியிட்டால் அது முழு இராணுவத்தையும் தாக்கும். இராணுவம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் கீழ் ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போதைக்கும் அவர்களின் அவசியத்திற்கமைய இந்த குழு செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.