கிளி. பொதுச்சந்தையில் தீக்கிரையான கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு

251 0

cabinet656565கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் தீக்கிரையான 122 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தை தொகுதியில் ஏற்பட்ட தீயினால், 122 கடைகள் அழிவடைந்தன.

இதனால் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைவாக, கடை உரிமையாளர்களுக்கு 74 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீயினால் அழிவடைந்த கடைகளை மீள நிர்மாணிப்பதற்கான, 150 மில்லியன் ரூபா மதிப்பீடுட்டுத் தொகைக்கும் அமைச்சரவை இணங்கியுள்ளது.

 இது தவிர கிளிநொச்சி மாவட்டத்திற்கு என 97 மில்லியன் ரூபா செலவில் புதிதாக தீயணைப்பு சேவை கட்டமைப்பொன்றை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்தனர்.