அதிநவீன ரயில்களை கொள்வனவு செய்யும் இலங்கை

301 0

ind_sl_flagஇந்தியாவிடம் இருந்து குளிரூட்டப்பட்ட 6 ரயில்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீசல் சக்தியில் இயங்கும் ரயில்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.. இதற்காக இந்தியா கடனுதவி வழங்கவுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களத்திற்காக குளிரூட்டப்பட்ட பயணிகள் ரயில் பெட்டிகளை கொண்ட ஆறு ரயில்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 அதற்கான ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்படும் கலந்துரையாடல் இணைப்பு குழு வழங்கும் பரிந்துரைக்கமைய தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.