முச்சக்கரவண்டிக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25

333 0

three_wheelers-0முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளன.

வாடகை அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 3 ஆண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத் தலைவர் கே.டி.அல்விஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 தற்போது இலங்கையில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளின் இறக்குமதி இவ்வாறு தொடர்ந்தால் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை முச்சக்கரவண்டி காலணியாக மாற்றமடையும்.

மேல் மாகணத்தில் உள்ள சகல முச்சக்கர வண்டிகளும் மேல் மாகணத்தின் வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும்.

இதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.