ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி

285 0

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு குறித்து யுனெஸ்கோ அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.

பத்திரிக்கையாளர் கொலை குறித்து யுனெஸ்கோ தெரிவித்துள்ளதாவது:-

இதில் அதிக அளவிலான கொலைகள் போர் பதற்றம் உள்ள, சண்டை நடைபெறும் இடங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகள் பதற்றமான இடங்களில் மட்டும் 59 சதவீதம் கொலைகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் பணியில் இருந்த போது 827 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா, ஈராக், ஏமன் மற்றும் லிபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் தான் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொலை நடைபெற்றுள்ளது. அதற்கு அடுத்தாற்போல் லத்தீன் அமெரிக்காவில் அதிக கொலைகள் நடைபெற்றுள்ளது.

பத்திரிக்கையாளர் கொலை குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு இருந்ததால் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் குறிப்பிடும்படியாக கொலைகள் ஏதும் நிகழவில்லை.

இதில் பெண் நிருபர்களை விட ஆண்கள் 10 மடங்கு அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். 2014-15 ஆண்டுகளில் 194 ஆண் பத்திரிக்கையாளர்களுக்கு 18 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.