சித்திரவதை குறித்த மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பொய் – ராஜித

325 0

rajitha2-720x480இலங்கையில் புதிய ஆட்சியின் கீழும், 600க்கும் மேற்பட்டவர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் சில திட்டமிட்டு, பணத்தை விரயம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் உள்ள 400க்கும் மேற்பட்ட சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து ஆராய எம்மால் முடியும்.

ஆனால் அந்த தரவுகளை அவர்கள் வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.