வடக்கின் சாதாரண சம்பவங்கள் கூட பூதாகரமாக்கப்படுகின்றது – இசுறு தேவப்பிரிய

294 0

isuru-devapriyaவடக்கில் இடம்பெறும் சாதாரண சம்பவங்கள் நாட்டில் பூதாகரமாக்கப்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாதாரண வாள்வெட்டு சம்பவங்களையும் பொலிஸ் தாக்குதல்களையும் அரசியலாக்கி இலாபம் தேட முனைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இதனை அரசியலாக்க வேண்டாம் என மாணவர்களின் பெற்றோரே வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், உலகிலேயே முதன்முதல் நடந்த சம்பவமாக இவ்விடயத்தை சித்தரிக்க முனைவது தவறான விடையம் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.