தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று சென்ற அவர், பின்னர் அப்பல்லோ வளாகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
லண்டர் மருத்துவர் ரிச்சர்ட் பீல் உள்பட அனைத்து மருத்துவர்களும் அவருக்கு சிறந்த சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
இதனால், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா பேசி வருகிறார்.
அவருக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூடிய விரைவில் அரசியலிலும், ஆட்சியிலும் முழுமையாக இருந்து பணிகளை அவர் மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டார்.