தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1200 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான விசேட கற்பித்தற் செயலமர்வுகள் ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றன.
நாடு முழுவதிலும் தமிழ்ப்பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இலகுவாகப் பங்கேற்கும் வகையில் ஐந்து மாநிலங்களில் அச் செயலமர்வுகள் நடைபெறுவதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. அச் செயலமர்வுகளை நடாத்துவதற்குத் தாயகத்திலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் அவர்களுடன் மேலதிகமாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் விரிவுரையாளரும் சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வுத் தொடரின் நிறைவாக யேர்மனியில் பிறந்து வளர்ந்து தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 350 க்கு மேற்பட்ட இளைய ஆசிரியர்களை மையப்படுத்தி அவர்களுக்கான மூன்றுநாள் தொடர் பயிற்சிப்பட்டறையும் விசேடமாக முÖடுN நகரில் நடைபெற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் அவ்விசேட முயற்சியினால் நாடு முழுவதிலும் சிதறிவாழும் இளைய ஆசிரியர்கள் எமது நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருங்கிணைந்து பொதுப் பணியாற்றுவதற்கான பயிற்சிகளையும் கற்பித்தற் திறனை வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் பெற்றுள்னர்.