கேரள மாநிலத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று கூறி கேரளத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மாநில சீரமைப்பின்போது சிறுபான்மைக்காக வழங்கப்பட்ட உரிமைகள் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என கேரள மாநில தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் தமிழக எல்லையோர மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகதம் வாழ்ந்துவருவதாகவும், இந்தநிலையில் அந்த மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் மொழி அடிப்படையில் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
இதன்படி கேரளம், ஆந்திரா, கன்னடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
இதன்போது தமிழக எல்லைப் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் வேற்று மாநிலங்களுக்கு உரித்தாக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழக எல்லைகளில் வசிக்கும் தமிழ் மக்கள் ஏனைய மாநிலங்களில் சிறுபான்மையாக வாழ்ந்துவருகின்றனர்.
அத்துடன் கேரளம், கர்னாட்டகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பெருந்தோட்டங்களில் பெரும்பாளான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பல சந்தர்ப்பங்களிலும் உரிமை மீறல்களுக்கு ஆட்படுவதாக தமிழ் அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.