தற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கிறது.

335 0

ranjith-de-zoysha44aதற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கும் அரசாங்கம் என்பது தெட்டதெளிவாக தெரிவதாக ஒன்றினைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் முறி தொடர்பான அறிக்கை வெளிவந்ததும், அதுதொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் முதலில் தெரிவித்தது.

எனினும் அந்த அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில், அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இறுதியாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்போவதாக கூறுகின்றனர்.

இந்த செயற்பாடானது திருடர்களை பாதுகாக்கும் ஒரு செயற்பாடு என்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சரத்பொன்சேகா, மத்திய வங்கியில் இதற்கு முன்னர் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய விடயம் ஒன்றும் பெரிதல்லவென சுட்டிக்காட்டினார்.

கடந்த கால அரசாங்கம் ஆயிரக்கணக்காக மோசடிகளை மேற்கொண்டது.

அப்போது, மௌனம் காத்து, அதற்கு ஒத்துழைந்து, நன்மை பெற்றுக்கொண்டவர்கள், இன்று கூச்சலிடுவது வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.