தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய கடற்தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று டெல்லியில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 5ஆம் திகதி இருநாட்டு அமைச்சர்கள் மட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், கடற்தொழிலில் ஈடுபட்ட ராமேஸ்வரம்; கடற்தொழிலாளர்கள் அச்சுறுத்தி விரட்டியடிக்கப்பட்டதுடன், நான்கு கடற் தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நிரந்திர தீர்வு காண, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.