தற்போது ட்ரம்ப் முன்னிலையில்

286 0

img_2325அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்க தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின் முடிவில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரியை விட 1 வீதம் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்தக் கருத்துக்கணிப்பின்படி டிரம்ப்புக்கு ஆதரவாக 46 சதவீதமானவர்களும், ஹிலாரிக்கு ஆதரவாக 45சதவீதமானவர்களும் வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.