இராணுவ புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்ர குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் வருடாந்தர இடமாற்ற முறைமைகளுக்கமைய இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை அந்த பதவியில் சேவையாற்றிய பிரிகேடியர் சுரேஷ் சலெய் புலனாய்வு பிரிவு படையணியின் தலைமைகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.