அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பெண்களை துன்புறுத்தும் 30 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப், ஹிலரி கிளின்டன் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சுகாதாரத்துறையை முற்றாக முடக்கிவிடுவார் என்றும் எச்சரித்துள்ளார்.