மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியாக்கப்பட்டமையானது, நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான பல அறிக்கைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் புதிய அரசாங்கம் இந்த அறிக்கையை தடையின்றி வெளிப்படுத்தியமையே அதன் வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.