இலங்கையில் எதிர்வரும் தினங்களில் மழை

303 0

rainவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிமின்னலின் போது பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.