தகவல் அறியும் சுதந்திர சட்டத்தை அமுலாக்குவது குறித்த தங்களின் அனுபவங்களை அமெரிக்கா, இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
அண்மையில் இந்த சட்ட மூலம் நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இந்த சட்ட மூலம் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவினால் இந்த சட்ட மூலத்தை அமுலாக்குவது தொடர்பான அனுபவ பகிர்வு விரிவுரை ஒன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்டது.
அமெரிக்க ராஜாங்க திணைக்கள நீதித்துறையின் தகவல் கொள்கைகள் அலுவலக பணிப்பாளர் மெலானி ஏன் புஸ்டேய், இதில் வளப்பகிர்வாளராக செயற்பட்டிருந்தார்.