தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் குறித்த மாணவர்கள் தொடர்பிலும்இ மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பிலும் அண்மைய நாட்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள நடராசா கஜனின் தாயார் சரோஜினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில்இ
எனது மகனுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனது பிள்ளையின் பெயரை அவ்வாறு தொடர்புப்படுத்த நான் விரும்பவில்லை. எனவேஇ இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இனிமேல் எந்தவொரு பிள்ளைக்கும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ எனது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக இச் சம்பவத்துடன்இ தொடர்புடையவர்களை கொலை செய்யுமாறு நான் கோரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுஇ நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும். என தெரிவித்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் -கஜனின் தாய்-
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024 -
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தளபதி கேணல் கிட்டு நினைவாக Indoor Tournament -நெதர்லாந்து.
January 7, 2025 -
தமிழ் மரபுத்திதிங்கள் 2025 தைப்பொங்கல்-நெதர்லாந்து,Breda
January 7, 2025 -
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024