ஆந்திரபிரதேஸில் இலங்கையர் ஒருவர் காணமல் போயுள்ளார்.
போபாலுக்கான மத யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கான தொடருந்தில் அவர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
எனினும் அதன் பின்னரே அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.