மிலேனியம் ஷேலேன்ச் உடன்படிக்கை குறித்து இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உடன்படிக்கை குறித்து ஆழமாக சிந்தித்து இரு நாடுகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முயற்சிப்போம் என்கிறார் சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த.
வெளிவிவகார அமைச்சில் இன்று சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் மிலேனியம் ஷேலேன்ச் உடன்படிக்கை குறித்து புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
மிலேனியம் ஷேலேன்ச் உடன்படிக்கையை நிறைவேற்றுவது குறித்து அமெரிக்க அதிக கவனம் செலுத்துகின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல் எமது நாட்டில் அனாவசியமான செயற்பாடுகள் அல்லது பாதிப்பான விடயங்களை கொண்டுவரக்கூடாது என நாம் கவனம் செலுத்துகின்றோம்.
புதிய அரசாங்கம் மிகவும் கணவமாக சர்வதேச விடையங்களை கையாள்கின்றது.
மிலேனியம் ஷேலேன்ச் உடன்படிக்கை விவகாரத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சர்வதேச விடயத்திலும் முரண்பாடுகள் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதுவே சர்வதேச நாடுகளை கையாளும் சிறந்த தெரிவும்கூட. எம்.சி.சி உடன்படிக்கை குறித்து இப்போதும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.