இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று மோதல்களில் குறைந்த பட்சம் 24 பேர் பலியாகினர்.
நேற்று காலையில் பாகிஸ்தானிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 8 பேர் பலியாகினர்.
அவர்களில் பெண்கள் மற்றும் சிறார்களே அதிகமானவர்கள்.
இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை அமுலில் உள்ள போதும், தொடர்ந்தும் பாகிஸ்தானிய படையினர் அதனை மீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் பாகிஸ்தானிய படையினருக்கு இந்திய படையினர் பதில்தாக்குதல் நடத்தினர்.
இதன்போது 14 பாகிஸ்தானிய இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன.
இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.