பாதுகாப்பு தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் மாணவர்களை அழைத்து செல்வதினால் ஏற்படக்கூடிய விபத்து தொடர்பில் பெற்றோருக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களின் உயிரின் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளாது பாதுகாப்பான தலைக்கவசம் இன்றி பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் பிள்ளைகளை அழைத்து செல்லக்கூடாது.
அவ்வாறு அழைத்துச்செல்லும் பெற்றோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் வாகன விபத்துக்களை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.