கொழும்பு மாநகரில் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

214 0

மேல் மாகாணத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றுமாறு ஆளுநர் டொக்டர் சீதா அரம்பேபொல மாகாணத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

நகரத்தை எழிலுடனும் தூய்மையுடனும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் முதலானவற்றை அகற்றும் பணி பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நகர அலங்கார வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் கழிவு பொருட்களை வீசுவதற்கு இடம் வழங்க வேண்டாம் என்றும் அவ்வாறு கழிவு பொருட்களை வீசுவோர் தொடர்பான தகவல்களை உடனடியான அறிவிக்குமாறு பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளனர்.