கோப் அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விரைந்து தமது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை நேற்று சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தாமதமின்றி இந்த அறிக்கையை ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே கோப் அறிக்கை குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.