மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிவிநியோக மோசடி குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வுகளை ஜே வி பி நடத்தவுள்ளது.
நாடு முழுவதும் இவ்வாறான கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் தலைமையிலான கோப் குழு, தமது அறிக்கையில் மத்தியவங்கி முறி விநியோகத்தில் மோசடி இடம்பெற்றதாகவும், இதற்கு முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த அறிக்கை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.