ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற சிவாஜிலிங்கம் பிரார்த்தனை

335 0

sivajilingam-1-e1428478304221அமெரிக்காவில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற வேண்டி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து, மரியன்னை பேராலயத்தில் மெழுகுதிரி கொழுத்தவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.

நிர்கதியாகியுள்ள தமிழர்களுக்கு அமெரிக்காவினால் மாத்திரமே அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம், அதனாலேயே தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்பட்டுவரும் ஹிலரி கிளின்டன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடி இந்த விசேட வேண்டுதல் பூஜைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.