முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக வழி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்றுகூடலும் முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நேற்று நள்ளிரவு முதல் குறித்த சேவையை நடைமுறைக்கு கொண்டு வருவதை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது நேற்று அதிகாலை 2.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அ.நீக்கிலாஸ்பிள்ளை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், நேற்று காலை கிளிநொச்சி மாவட்டத்தில் 90 தற்காலிக வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.