யாழ்ப்பாணத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
யாழ் கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சி நெறிக்கு யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் தலைமை தாங்கினார்.
இந் நிகழ்வை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வசந்தம் விசன்றஸ்ட் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பயிற்சி நெறிக்காக சிங்கப்பூரில் இருந்து பயிற்றுவிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இப்பபயிற்சி நெறிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி நெறிக்கு பிரதேச செயலகங்களில் இருந்து மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களில் இருந்து பெண் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.