வழமைக்குத் திரும்பியது யாழ் பல்கலைக்கழகம்

361 0

download-1யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முடக்கப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதி மொழிகளை அடுத்தே தாம் வகுப்புப் பகிஷ்ரிப்பை கைவிட்டு, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது இந்தத் தீர்மானத்தை அறிவித்தது.

இதற்கமைய அனைத்து பீடங்களின் கல்விச் செயற்பாடுகளும் இன்று வழமை போல் ஆரம்பமாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்து கடந்த 21 ஆம் திகதி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டியே மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் உத்தரவாதத்திற்கு அமைய தாம் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு கிடைக்காதுவிடின் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.