கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்!

395 0

கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண ,வடமத்திய மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அறியமுடிந்தது.

முன்னதாக அவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருந்தார்.இருந்தபோதும் இறுதிநேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும்,அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

”நாட்டுப்பற்று வல்லுநர்களின் கருத்துக்களம்” என்ற அமைப்பின் ஊடாக கடந்த காலங்களில் அனுராதா ,அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.