அமைச்சுக்களின் பொறுப்புக்கள் குறித்த புதிய வர்த்தமானி இன்று வெளியீடு

272 0

அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விபரம் மற்றும் அந்த அமைச்சுக்களுக்குக் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பான அறிவிப்பு,  ஜனாதிபதி கையொப்பத்துடன் அரச அச்சகத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  நேற்று அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் பிரதமர் உட்பட 16 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களும் இந்த 16 அமைச்சுக்களின் பொறுப்பிலும் ஜனாதிபதியின் கீழ் வரும் விதத்திலும் பிரித்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.