பயிற்சி சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய குறித்த கப்பல் நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் 3ஆம் திகதி வரை ‘நிரீக்ஷக்’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினால் ‘நிரீக்ஷக்’ கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டதுடன், கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் B.M.பிரசாந்த் மற்றும் இலங்கை கடற்படையின் ரியல் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.