சத்திய வேள்வியின் நாயகனே வாழியவே ! குறியீடு இணையம்.

1727 0

கார்த்திகை மாதம் தவமிருந்தது
பார்வதித்தாயின் கருவறையில்
ஓர் பேரொளி தோன்ற …

தொன்மைத் தமிழ்
பேறு பெற்றது
தமிழீழப் போராளன்
ஈழத்தில் பிறப்பதற்கு …

ஆம் …பிரபாகரன் !
உலகப்போரியல் வரலாற்றில்
மறுக்கமுடியாத அடையாளம் …

இன்று .. போர் வல்லோனுக்கு
அகவை அறுபத்தைந்தாம் …
தமிழினத்தின் சத்திய வேள்வி
நாயகனுக்கு பிறந்தநாளாம் …

பறைமுழங்க ! சங்கொலிக்க !
நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம் !

அடங்கிக் கிடந்த தமிழினத்தின்
அடிமை மனங்களில்
விறலின் வீச்சை பதித்தவன் …

பலமே சுதந்திரத்தின் ஆணிவேர்
என்ற மகாசக்தியின் ஆற்றலை
ஈழமண்ணில் விதைத்தவன் …

ஒன்றாகிப் பலவாகி
தமிழீழப் போரின்
ஒவ்வொரு அணுவிலும் மிளிர்பவன் …

தமிழீழ சத்திய வேள்வி
நாயகனுக்கு பிறந்தநாளாம்
பறைமுழங்க ! சங்கொலிக்க !
நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம் !

நேர்மை , ஒழுக்கம் ,தியாகம்
அர்ப்பணிப்பு கொண்ட தலைவன் …

அன்பு ,இரக்கம் ,பாசம் கொண்ட
தமிழீழத் தேசத்தலைவன் …

நீதியின் முன் யாவரும் சமன்
என்ற உறுதியின் வடிவம் …

இயற்கை அவனது வழிகாட்டி !
போர்க்குணம் அவனது மரபு !
படைத்திறன் அவனது உரம் !
அறிவாற்றல் அவனது ஆயுதம் !

வல்லரசுகளின் ஆழ்மனதில்
தமிழீழத்தின் வரைபடத்தை
பதித்த போர் வியூகன் …

உலகப் புரட்சியாளர்களில்
ஓர் அரசை நிறுவி
வான்படை கண்ட
தமிழினத் தலைவன் …

உலகமே புருவத்தை
நிமிர்த்தும் அளவு
போர் வியூகம் படைத்த
போர் ஞானி …

“அடிபணிதல் ”
என்ற சொல்லை
தமிழகராதியிலிருந்து
அகற்றியவன் …

தமிழினத்தின் சத்திய வேள்வி
நாயகனுக்கு பிறந்தநாளாம்
பறைமுழங்க ! சங்கொலிக்க !
நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம் !

சிங்கள அரசை
உலகின் காலடியில்
விழவைத்த போராளன் …

இன்று !
மௌனித்த நெருப்புக்குள்
ஈழத்தை செதுக்கும் சிற்பியாய்
புடம் போடும் கரமாய்
அனல் வீசுகிறான் …

மௌனம் என்பது
ஆழ வேராகும்
காலம் மாறும்
இலைகள் துளிர்க்கும்
ஈழமலர்ச்சோலைகள் பூக்கும்
நம்பிக்கை வானில்
ஒளி தோன்றும் …

தமிழினத்தின் சத்திய வேள்வி
நாயகனுக்கு பிறந்தநாளாம்
பறை முழங்க ! சங்கொலிக்க !
நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம் .