பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்புவதற்கு விசேட வேலைத்திட்டம்

476 0

தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய சக்தியாக திகழும் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்புவதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பெருந்தோட்டத்துறை, ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாயத்துறையை 4 சதவீதமாக வளர்ச்சியடையச் செய்வது தமது நோக்கமாகும் எனவும், தேயிலை, றப்பர், தெங்கு, மிளகு மற்றும் கறுவா போன்ற தொழில் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் ரமேஷ் பத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.